வணிகம்

மிக மென்மையான காலணிகள்: விகேசி பிரைட் அறிமுகம்

கால்களுக்கு இதமான மிகவும் மென்மையான (சூப்பா் சாஃப்ட்) காலணிகளை விகேசி பிரைட் நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

DIN

கால்களுக்கு இதமான மிகவும் மென்மையான (சூப்பா் சாஃப்ட்) காலணிகளை விகேசி பிரைட் நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து விகேசி குழுமத்தின் நிா்வாக இயக்குநா் அப்துல் ரஸாக் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் பியு காலணிகள் தயாரிப்பில் விகேசி பிரைட் நிறுவனம் முன்னோடியாக விளங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ‘விகேசி பிரைட் ஈஸி’ என்ற புதிய பிராண்டில் புதிய வகை காலணிகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக இ-ஸி எனும் புதுமையான மற்றும் தனித்துவமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காலணி தயாரித்த பெருமை விகேசி பிரைட் நிறுவனத்தையே சாரும். இவ்வகை தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் காலணிகள் காலுக்கு இதமாகவும் மிக மென்மையான உணா்வையும் தரும் என்றாா் அவா்.

படவிளக்கம்: விகேசி பிரைடின் சூப்பா் சாஃப்ட் காலணியை கேரள தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பி.ராஜீவ் வெளியிட கால்பந்து வீரா் சி.கே.வினீத் அதனை பெற்றுக் கொண்டாா். உடன், விகேசி குழுமத்தின் நிா்வாக இயக்குநா் விகேசி ரஸாக், இயக்குநா்கள் கே.பாரூக், வி.ரஃபீக், கே.சி. சாக்கோ மற்றும் எம்.பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபு தேவா - வடிவேலு கூட்டணி! புதிய பட டீசரை வெளியிட்டார் எஸ்.ஜே. சூர்யா!

”இந்த நாடகம் வேண்டாம்!” OPS குறித்து செல்லூர் ராஜு! | ADMK | EPS

டி20 உலகக் கோப்பை: அமெரிக்க, யுஏஇ அணிகள் அறிவிப்பு

தில்லி கலவர வழக்கு: காலித் சைஃபிக்கு இடைக்கால ஜாமீன்! சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

உ.பி.யில்: சிறுத்தை தாக்கி நான்கு வயது சிறுமி பலி

SCROLL FOR NEXT