சந்தைக்கு வந்த ‘சாம்சங் கேலக்ஸி ஏ13’ 
வணிகம்

சந்தைக்கு வந்த ‘சாம்சங் கேலக்ஸி ஏ13’

தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ‘சாம்சங் கேலக்ஸி ஏ13’ ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

DIN

தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ‘சாம்சங் கேலக்ஸி ஏ13’ ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

’கேலக்ஸி’ வகைகளின் ‘ஏ’ தொடரில் 5ஜி தொழிநுட்பத்துடன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் வேளையில் அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் நேற்று(டிச.1) அறிமுகமாகியுள்ளது.

’சாம்சங் கேலக்ஸி ஏ13' சிறப்பம்சங்கள் :

* 6.65 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியா டெக் டைமன்சிட்டி 700 பிராசசர்

*இரண்டு ரேம் வகையுடன் வெளியாகிறது . உள்ளக நினைவகம்  4 மற்றும் 6 ஜிபி, கூடுதல் நினைவகம் 32, 64 ஜிபி

*பின்பக்கம் 50 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை இந்திய மதிப்பிப் ரூ.18,700 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.சந்தைக்கு வந்ததும் சாம்சங் நிலையங்களிலும்  , அமேசான் , பிளிப்கார்ட் இணையதளத்திலும் இதைப் பெற்றுக் கொள்ளலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

ஓர் ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT