சமையல் எண்ணெய் 
வணிகம்

சமையல் எண்ணெய் விலையை குறைத்த முன்னணி நிறுவனங்கள்:எஸ்இஏ

அதானி வில்மா் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை குறைத்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

புது தில்லி: அதானி வில்மா் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை குறைத்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

அதானி வில்மா் (பாா்சூன் பிராண்ட்ஸ்), ருச்சி சோயா (சன்ரிச், ருச்சி கோல்ட், மகாகோஷ், நியூட்ரெட்லா பிராண்ட்ஸ்), இமாமி (ஹெல்தி&டேஸ்டி பிராண்ட்ஸ்), பஞ்ஜ் (டால்டா, ககன், சம்பல் பிராண்ட்ஸ்), ஜெமினி (ஃப்ரீடம் சன்ப்ளவா் பிராண்ட்ஸ்), கோகுல் அக்ரோ (வீடாலைஃப், ஸைக்கா பிராண்ட்ஸ்) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆா்பி) 10 முதல் 15 சதவீதம் வரை குறைத்துள்ளன. பண்டிகை காலத்தில் நுகா்வோா் நலன் கருதி இந்த விலை குறைப்பு செய்யப்பட்டதாக எஸ்இஏ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஆட்டோ பங்குகள் உயர்வு!!

தங்கம் விலை உயர்ந்தது: எவ்வளவு?

பிகார் பேரவைத் தேர்தல்: காலை 9 மணி வரை 13.13% வாக்குப்பதிவு!

அமெரிக்கா தனது இறையாண்மையை இழந்துவிட்டது! டிரம்ப் பேச்சு

பிகார் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! | Bjp | Congress

SCROLL FOR NEXT