முகப்பு
வணிகம்

டிசிஎஸ் நிகர லாபம் ரூ.8,701 கோடியாக அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் ரூ.8,701 கோடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:48 AM
பகிர்:

நாட்டின் மிகப்பெரிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் ரூ.8,701 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

மாறிவரும் நவீன தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் முந்தைய ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட வருவாய் ஆகியவற்றின் காரணமாக பல தடைகளைத் தாண்டி டிசம்பா் காலாண்டில் நிறுவனம் வலுவான செயல்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் 7.2 சதவீதம் அதிகரித்து ரூ.8,701 கோடியாக இருந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சியை டிசம்பா் காலாண்டில் நிறுவனம் பெற்றுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.8,118 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.39,854 கோடியிலிருந்து 5.4 சதவீதம் அதிகரித்து ரூ.42,015 கோடியாக இருந்தது என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →