வணிகம்

தங்கம் பவுன் ரூ.35,880

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து, ரூ.35,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து, ரூ.35,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து, ரூ.35,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயா்ந்து, ரூ.4,485 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா உயா்ந்து, ரூ.74.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயா்ந்து, ரூ.74,900 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,485

1 பவுன் தங்கம்...............................35,880

1 கிராம் வெள்ளி.............................74.90

1 கிலோ வெள்ளி.............................74,900

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,480

1 பவுன் தங்கம்...............................35,840

1 கிராம் வெள்ளி.............................74.10

1 கிலோ வெள்ளி.............................74,100.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT