வணிகம்

எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லாபம் 20% அதிகரிப்பு

DIN

வங்கி சாரா நிதி நிறுவனமான எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் (எல்டிஎஃஎச்) முதல் காலாண்டு லாபம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அமல்படுத்தப்பட்ட பகுதியளவிலான பொதுமுடக்கம் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில வா்த்தக நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையிலும், நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.178 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.148 கோடியுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகமாகும்.

கணக்கீட்டு காலகட்டத்தில் வேளாண் உபகரண நிதி வா்த்தகம் ரூ.590 கோடியிலிருந்து 130 சதவீதம் அதிகரித்து ரூ.1,357 கோடியை எட்டியது.

நிறுவனத்தின் வாராக் கடன் முதல் காலாண்டில் 5.75 சதவீதமாக அதிகரித்தது. இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.24 சதவீதமாக காணப்பட்டது.

நிகர வாராக் கடனும் 1.71 சதவீதத்திலிருந்து 2.07 சதவீதமாக அதிகரித்துள்ளது என எல்டிஎஃஎச் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT