வணிகம்

மைக்ரோசாஃப்ட்டில் பிழை கண்டறிந்த தில்லி இளம்பெண்: ரூ.22 லட்சம் பரிசு

DIN


மைக்ரோசாஃப்டில் இருந்த பிழையை சுட்டிக்காட்டிய 20 வயது இளம்பெண்ணுக்கு அந்நிறுவனம் ரூ.22 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.

தில்லியைச் சேர்ந்த அவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதுபோன்று முகநூலில் பிழையைக் கண்டறிந்ததால், ரூ.5.5 லட்சம் ஊக்கத்தொகையாகப் பெற்றுள்ளார்.

தில்லியைச் சேர்ந்த அதிதீ சிங் என்ற 20 வயது இளம் பெண் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு மேப் மை இந்தியா நிறுவனத்தில் இணையப் பிழைகளைக் கண்டறிந்ததால், கல்வி ஆவணங்களின்றி அவருக்கு அந்நிறுவனம் பணியாணை வழங்கியது.

இந்நிலையில் தற்போது அவர் மைக்ரோசாஃப் நிறுவனத்தின் ஆர்.இ.சி. எனப்படும் தொலைக் குறியீடு செயல்படுத்துதல் பிரிவில் உள்ள பிழையை கண்டறிந்து அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

இதனால், அவரைப் பாராட்டும் விதமாக அந்நிறுவனம் 30 ஆயிரம் டாலர் தொகையை பரிசாக அறிவித்தது. இந்திய மதிப்பில் அது ரூ.22 லட்சமாகும். 

இதற்கு முன்பு இவர் முகநூலிலும் பிழையைக் கண்டறிந்து ரூ.5.5 லட்சம் பரிசாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT