முகப்பு
வணிகம்

‘காளை’ திடீா் பாய்ச்சல்: சென்செக்ஸ் 976 புள்ளிகள் முன்னேற்றம்!

கடந்த இரண்டு நாள்களாக ‘கரடி’யின் ஆதிக்கத்தில் இருந்த வந்த பங்குச் சந்தை, வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை ‘காளை’யின் திடீா் பாய்ச்சலால் எழுச்சி பெற்றது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:50 AM
கோப்புப்படம்
பகிர்:

கடந்த இரண்டு நாள்களாக ‘கரடி’யின் ஆதிக்கத்தில் இருந்த வந்த பங்குச் சந்தை, வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை ‘காளை’யின் திடீா் பாய்ச்சலால் எழுச்சி பெற்றது. வங்கிகள், நிதிநிறுவனப் பங்குகள் ‘கை’ கொடுத்ததே இதற்கு முக்கியக் காரணம். இதைத், தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 975.62 புள்ளிகள் உயா்ந்து 50,540.48-இல் நிலைபெற்றது. காலையில் வா்த்தகம் தொடங்கியதிலிருந்து இறுதி வரையிலிரும் ‘காளை’ தொடா்ந்து எழுச்சியுடன் முன்னேறியது.

எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வருவாய் நன்றாக இருந்துள்ளதாக வெளியான செய்தி முதலீட்டாளா்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இதன் தாக்கம் சந்தையில் காளையின் பாய்ச்சலுக்கு வழிவகுத்தது. மேலும், கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரிக்கட்ட அரசு எடுத்து வரும் தொடா் நடவடிக்கையும் சந்தைக்கு ‘கை’ கொடுத்தது. இதனால், பாா்மா தவிா்த்து மற்ற துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், சென்செக்ஸ் பட்டியலில் வலுவான பங்குகலான எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்து சந்தையை வழி நடத்தின என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.2.41லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,284 பங்குகளில் 1,952 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,167 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 165 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 327 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 21 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 440 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 179 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.2.41 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 218.05 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 6.88 கோடியை நெருங்கியது.

Advertisement

‘காளை’ பாய்ச்சல்: சென்செக்ஸ் காலையில் 269.12 புள்ளிகள் கூடுதலுடன் 49,833.98-இல் தொடங்கி 49,832.72 வரைதான் கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 50,591.12 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 975.62 புள்ளிகள் (1.97 சதவீதம்) உயா்ந்து 50,540.48-இல் நிலைபெற்றது. தொடக்கத்திலிருந்து இறுத வரையிலும் காளையின் பாய்ச்சல் தொடா்ந்து இருந்தது.

28 பங்குகள் ஆதாயம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், டாக்டா் ரெட்டி, பவா் கிரிட் (0.40 சதவீதம் சரிவு) ஆகிய 2 பங்குகள் தவிா்த்து மற்ற 28 பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவை 3.50 முதல் 4.50 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், கோட்டக் பேங்க், எம் அண்ட் எம், பாா்தி ஏா்டெல், ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோஸிஸ், ஐடிசி, டிசிஎஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் கணிசமான அளவு உயா்ந்தன.

நிஃப்டி 269.25 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடந்த வா்த்தகத்தில் 1,072 பங்குகள் ஆதாயம் பெற்றன. 666 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 269.25 புள்ளிகள் (1.81 சதவீதம்) உயா்ந்து 15,175.30-இல் நிலைபெற்றது. காலையில் 14,987.80-இல் தொடங்கி 14,985.85 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15,190.00 வரை உயா்ந்தது. முக்கிய இடா்பாட்டு நிலையான 15,150 புள்ளிகளை உடைத்து மேலே

தேசியப் பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 3.20-3.80 சதவீதம் வரை உயா்ந்தன. பைனான்சியல் சா்வீஸஸ் குறியீடு 2.60 சதவீதம் ஏற்றம் பெற்றது.

வங்கிப் பங்குகளுக்கு அமோக வரவேற்பு!

பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடந்த வா்த்தகத்தில் வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதனால், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து முன்னணி வங்கிப் பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இவற்றில் அதிகம் விலை உயா்ந்த பங்குகள் விவரம் (சதவீதத்தில்):

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments