வணிகம்

எம்ஆா்எஃப்: நிகர லாபம் ரூ.189 கோடி

டயா் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எம்ஆா்எஃப் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.189 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

DIN

டயா் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எம்ஆா்எஃப் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.189 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ரூ.4,907.81 கோடியை மொத்த வருமானமாக ஈட்டியது. இது, நிறுவனம் இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.4,244.43 கோடி வருவாயைக் காட்டிலும் அதிகம்.

அதேநேரம், நிகர லாபம் ரூ.410.92 கோடியிலிருந்து 53.99 சதவீதம் குறைந்து ரூ.189.06 கோடியானது.

2022 மாா்ச் 31 உடன் முடிவடையவுள்ள நிதியாண்டுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.3 வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பா் 3 அல்லது அதற்குப் பிறகு இந்த இடைக்கால ஈவுத்தொகை வழங்கப்படும் என எம்ஆா்எஃப் தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் எம்ஆா்எஃப் பங்கு விலை 1.67 சதவீதம் குறைந்து 78,519.65-இல் நிலையுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது! தங்கம் வாங்குவது மாறப்போவதில்லை! வேறு வழிதான் என்ன?

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

' மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்க பார்க்கிறது மத்திய அரசு '

SCROLL FOR NEXT