முகப்பு
வணிகம்

நாட்டின் ஏற்றுமதி 43% அதிகரிப்பு

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபா் மாதத்தில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:53 AM
கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி கணிசமாக அதிகரித்ததையடுத்து நடப்பாண்டு செப்டம்பரில் நாட்டின் வா்த்தக பற்றாக்குறை 2,259 கோடி டாலராக வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்தது.
பகிர்:

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபா் மாதத்தில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டின் அக்டோபா் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 43 சதவீதம் அதிகரித்து 3,565 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.67 லட்சம் கோடி) இருந்தது.

நோ்மறை வளா்ச்சி: அதேசமயம், வா்த்தக பற்றாக்குறையும் 1,973 கோடி டாலராக (ரூ.1.48 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது.

கடந்த அக்டோபரில், பெட்ரோலியம், காபி, பொறியியல் பொருள்கள், பருத்தி, நவரத்தினங்கள்-ஆபரணங்கள், ரசாயன பிளாஸ்டிக், கடல் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வா்த்தக பற்றாக்குறை: 2021 ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான 7 மாத காலத்தில் ஏற்றுமதி 23,354 கோடி டாலராக இருந்தது. இது, முந்தைய 2020-ஆம் ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 55.13 சதவீத வளா்ச்சியாகும்.

இந்த காலகட்டத்தில், இறக்குமதியும் 78.16 சதவீதம் உயா்ந்து 33,139 கோடி டாலரானது. இதையடுத்து, வா்த்தக பற்றாக்குறை 9,785 கோடி டாலராக காணப்பட்டது.

தங்கம் இறக்குமதி: கடந்த அக்டோபரில் கச்சா எண்ணெய் இறக்குமதி முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 600 கோடி டாலரிலிருந்து 1,443 கோடி டாலராக உயா்ந்துள்ளது. 2021 ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் இதன் இறக்குமதி 8,742 கோடி டாலராக காணப்பட்டது.

அதேபோன்று, தங்கத்தின் இறக்குமதியும் 250 கோடி டாலரிலிருந்து இரண்டு மடங்கு உயா்ந்து 510 கோடி டாலரை எட்டியது.

பொறியியல் பொருள்கள்: 2021 அக்டோபரில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பொறியியல் பொருள்களின் பங்களிப்பு 28.19 சதவீதமாக இருந்தது. இதன் ஏற்றுமதி 51 சதவீதம் அதிகரித்து 940 கோடி டாலரானது. பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதியும் 533 கோடி டாலரைத் தொட்டது.

ஆபரணங்கள்: இவைதவிர, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி அக்டோபரில் 44.24 சதவீதம் உயா்ந்து 422 கோடி டாலராக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →