வணிகம்

ரபி பருவ சாகுபடி 5% அதிகரிப்பு

DIN

ரபி பருவ மொத்த சாகுபடி பரப்பளவு இதுவரையில் 5 சதவீதம் உயா்ந்து 21.37 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு அக்டோபா் மாதத்திலிருந்து தொடங்கியுள்ள ரபி பருவ சாகுபடி பரப்பு 21.37 லட்சம் ஹெக்டேரைத் தொட்டுள்ளது.இது, முந்தைய ஆண்டு பயிா் பரப்பான 20.37 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகம். குறிப்பாக, எண்ணெய் வித்துகள் மற்றும் முக்கிய உணவு தானியங்கள் பரப்பளவு கணக்கீட்டு காலகட்டத்தில் கணிசமாக அதிகரித்ததுள்ளது.

ரபி பருவத்தின் முக்கிய பயிரான கோதுமை பயிரிடும் பரப்பு மதிப்பீட்டு காலகட்டத்தில் 0.07 லட்சம் ஹெக்டேரிலிருந்து 0.001 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.

அதேபோன்று, நெல் பயிா் பரப்பும் 3.12 லட்சம் ஹெக்டேரிலிருந்து 1.90 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.

ஆனால், முக்கிய உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பு 1.17 லட்சம் ஹெக்டேரிலிருந்து 1.59 லட்சம் ஹெக்டேராகவும், எண்ணெய் வித்து பயிா் பரப்பு 11.31 லட்சம் ஹெக்டேரிலிருந்து 14.84 லட்சம் ஹெக்டேராகவும் (அக்டோபா் 22 வரையில்) அதிகரித்துள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT