வணிகம்

எச்டிஎஃப்சி லைஃப் லாபம் ரூ.276 கோடி

DIN

எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் ரூ.275.91 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விபா படால்கா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா பேரிடரின் இரண்டாவது அலையில் அதிக இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்பட்டதன் விளைவாக செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் சரிவைச் சந்தித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.20,478.46 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டி வருமானம் ரூ.16,426.03 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம்.

நிகர லாபம் ரூ.327.83 கோடியிலிருந்து 16 சதவீதம் சரிவடைந்து ரூ.275.91 கோடியானது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 2 லட்சம் இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன பங்கின் விலை 0.61 சதவீதம் குறைந்து ரூ.690.95-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT