முகப்பு
வணிகம்

’ரெட்மி 10 ஏ’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஸியோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ரெட்மி 10ஏ’  ஸ்மார்ட்போன்  இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

Updated On : 20 ஏப்ரல், 2022 at 3:49 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:31 PM

ஸியோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ரெட்மி 10ஏ’  ஸ்மார்ட்போன்  இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சீனாவைச் சேர்ந்த ஸியோமி நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பான  ’ரெட்மி 10ஏ’ ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘4ஜி’ தொழில்நுட்பத்தில் வெளியான இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் விற்கப்பட உள்ளது.

Advertisement

’ரெட்மி 10ஏ’ சிறப்பம்சங்கள் :

* 6.53 ஃபுல் எச்டி திரை

* மீஹெலியோ ஜி 25 ஆக்டோ கோர் பிராசசர்

* ரேம் 3ஜிபி, 4ஜிபி  + மெமரி ஸ்டோரேஜ் 32 ஜிபி, 64 ஜிபி

* ஆன்டுராய்ட் 11

* 13 எம்பி முதன்மை கேமரா , 5 எம்பி செல்ஃபி கேமரா

* 5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

மேலும்,  இந்த ஸ்மார்ட்போனின்  அறிமுக விலையாக 3ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.8,499 ஆகவும், 4ஜிபி ரேம்; 64 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் ரூ.9,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல்-26 ஆம் தேதி முதல் விற்பனை துவங்க உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.