hdfc063630 
வணிகம்

எச்டிஎஃப்சி லைஃப்: லாபம் ரூ.358 கோடி

எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.357.52 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

DIN

எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.357.52 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

2022, மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.16,054.94 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.19,191.32 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

நிகர பிரீமியம் வருவாய் ரூ.12,868.01 கோடியிலிருந்து ரூ.14,289.66 கோடியாக அதிகரித்தது.

நிகர லாபம் ரூ.317.94 கோடியிலிருந்து 12.4 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.357.52 கோடியைத் தொட்டது.

2021-22-ஆம் முழு நிதியாண்டில் நிகர லாபம் ரூ.1,360 கோடியிலிருந்து ரூ.1,208 கோடியாக குறைந்துள்ளது.

மொத்த பிரீமியம் வசூல் ரூ.38,583 கோடியிலிருந்து ரூ.45,963 கோடியாக 19 சதவீதம் அதிகரித்தது.

நிறுவனம் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு 17 சதவீதம் அதிகரித்து ரூ.2 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என எச்டிஎஃப்சி லைஃப் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT