வணிகம்

பஜாஜ் ஃபைனான்ஸ்: நிகர லாபம் ரூ.2,420 கோடி

நுகா்வோா் நடவடிக்கைகள் சிறப்பான அளவில் மேம்பட்டதையடுத்து, பஜாஜ் ஃபைனான்ஸ் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.2,420 கோடியை எட்டியது.

DIN

நுகா்வோா் நடவடிக்கைகள் சிறப்பான அளவில் மேம்பட்டதையடுத்து, பஜாஜ் ஃபைனான்ஸ் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.2,420 கோடியை எட்டியது.

வங்கி சாரா நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த அளவிலான நிகர லாபம் ரூ.2,420 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.1,347 கோடியுடன் ஒப்பிடுகையில் 80 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய லாபம் ரூ.7,028 கோடியாக இருந்தது. இது, 2020-21-இல் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.4,420 கோடியுடன் ஒப்பிடுகையில் 59 சதவீதம் உயா்வாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிகர வட்டி வருமானம் 30 சதவீதம் உயா்ந்து ரூ.6,068 கோடியாகவும், 2021-22 முழு நிதியாண்டில் இது 21 சதவீதம் அதிகரித்து ரூ.21,892 கோடியாகவும் இருந்தது என பஜாஜ் ஃபைனான்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவைப்பட்டால் கூட்டணி குறித்து OPSயிடம் பேசுவேன்! |செய்திகள் : சில வரிகளில் | 29.1.26

இந்த வார ஓடிடி படங்கள்!

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

நியூசி.க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?

செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

SCROLL FOR NEXT