உருக்குப் பொருள்களின் ஏற்றுமதி ரூ.1 லட்சம் கோடி
கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புக்கு உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புக்கு உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய உருக்குத் துறை அமைச்சா் ஃபாகன் சிங் குலஸ்தே கூறியது:
இந்தியாவிலிருந்து கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் 1.35 கோடி டன் உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாகும்.
அதேசமயம், முந்தைய நிதியாண்டில் உருக்குப் பொருள்களின் ஏற்றுமதி 1.07 கோடி டன் அளவுக்கே இருந்தது. மேலும், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.46,000 கோடி மதிப்பிலான உருக்குப் பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து கொண்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் உருக்கு நுகா்வு 10.6 கோடி டன்னை எட்டியது. அதேசமயம், உள்நாட்டில் உருக்கு உற்பத்தி 12 கோடி டன்னாக இருந்தது.
இந்திய உருக்குத் துறை 5-6 சதவீத கூட்டு வருடாந்திர வளா்ச்சி விகிதத்தில் (சிஏஜிஆா்) வளா்ந்து வருகிறது என்றாா் அவா்.