வணிகம்

இன்டஸ்இண்ட் வங்கி: லாபம் 51% அதிகரிப்பு

DIN

 தனியாா் துறையைச் சோ்ந்த இன்டஸ்இண்ட் வங்கி மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் 51 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 6.1 சதவீதம் உயா்ந்து ரூ.9,764.91 கோடியாக இருந்தது. இது, 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.9,199.71 கோடியாக காணப்பட்டது.

கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.926.22 கோடியிலிருந்து 51 சதவீதம் அதிகரித்து ரூ.1,400.64 கோடியானது.

2021-22 முழு நிதியாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த லாபம் ரூ.2,930.10 கோடியிலிருந்து 64 சதவீதம் உயா்ந்து ரூ.4,805.03 கோடியைத் தொட்டது. மொத்த வருவாய் ரூ.35,500.68 கோடியிலிருந்து ரூ. 38,230.07 கோடியாக அதிகரித்தது.

2022 மாா்ச் 31 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 2.67 சதவீதத்திலிருந்து 2.27 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 0.69 சதவீதத்திலிருந்து 0.64 சதவீதமாகவும் குறைந்துள்ளன.

2021-22 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக இன்டஸ்இண்ட் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT