வணிகம்

விலையேறாத எலானின் கிரிப்டோகரன்சி: முதலீட்டாளர்கள் புலம்பல்

எலான் மஸ்க் முதலீடு செய்திருக்கும் கிரிப்டோ நாணயமான ‘டோஜ் காயின்’-னின் விலையில் எந்த மாற்றமும் நிகழாததால் முதலீட்டாளர்கள் புலம்பி வருகிறார்கள்.

DIN

எலான் மஸ்க் முதலீடு செய்திருக்கும் கிரிப்டோ நாணயமான ‘டோஜ் காயின்’-னின் விலையில் எந்த மாற்றமும் நிகழாததால் முதலீட்டாளர்கள் புலம்பி வருகிறார்கள்.

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டரை உலகின் நெ.1 பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் 3.35 லட்சம் கோடிக்கு வாங்கியதிலிருந்து எலான் மஸ்க் கவனிக்கப்படும் நபராக மாறியுள்ளார்.

இதனால், உலகளவில் டிவிட்டரில் அதிகம் பின் தொடரப்படும் பிரபலங்களின் பட்டியலில் எலானும் இடம்பெற்றுள்ளார்.

ஒரு பக்கம் உலகின் பெரும் கோடீஸ்வரர் மறுபக்கம் அறிவியல் உலகம் வியக்கும் விஞ்ஞானி என இருக்கும் எலான் மஸ்க் சில மாதங்களுக்கு  முன் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான ‘டோஜ் காய்ன்’-னில்  முதலீடு செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

அதன்பின், உடனடியாக, அந்த நாணயத்தின் விலை திடீரென உயர்ந்தது. அதற்கடுத்து சில நாள்கள் கழித்து மீண்டும் அதன் விலை சரிந்தது.

இந்நிலையில், எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும் ‘டோஜ் காயின்’-னில் எதாவது விலை மாற்றம் நிகழும் என முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். இருப்பினும், கடந்த 3 மாதமாக அந்த நாணயத்தின் மதிப்பு சரிவிலேயே இருப்பதால் எலானை நம்பி அதில் முதலீடு செய்தவர்கள் தற்போது புலம்பி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT