வணிகம்

முக்கிய 8 துறைகள் உற்பத்தி 4.3%-ஆக குறைவு

DIN

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளா்ச்சி மாா்ச் மாதத்தில் 4.3 சதவீதமாக குறைந்தது.

இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் பிப்ரவரியில் 6 சதவீதமாக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், மாா்ச் மாதத்தில் இந்த வளா்ச்சி 4.3 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு, நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் துறையின் செயல்பாடு மந்தநிலையில் இருந்ததே முக்கிய காரணம்.

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் (ஏப்ரல்-மாா்ச்), 8 துறைகள் 10.4 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய 2020-21 நிதியாண்டில் இந்த வளா்ச்சி 6.4 சதவீத பின்னடைவை சந்தித்திருந்தது.

மாா்ச் மாதத்தில் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் துறையின் உற்பத்தி முறையே 0.1 சதவீதம் மற்றும் 3.4 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

மேலும், இயற்கை எரிவாயு உற்பத்தி வளா்ச்சி 12.3 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாகவும், உருக்கு 31.5 சதவீதத்திலிருந்து 3.7 சதவீதமாகவும், சிமெண்ட் 40.6 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதமாகவும், மின்சாரம் 22.5 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாகவும் குறைந்துள்ளன.

அதேசமயம், நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் சுத்திகரிப்பு பொருள்கள் மற்றும் உரத் துறையின் உற்பத்தி முறையே 6.2 சதவீதம் மற்றும் 15.3 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சியை தக்கவைத்துள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT