வணிகம்

விப்ரோ: லாபம் ரூ.3,092 கோடி

DIN

தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான விப்ரோ நான்காவது காலாண்டில் ரூ.3,092.5 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.2,974.1 கோடியுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் அதிகம்.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.16,245.4 கோடியிலிருந்து 28 சதவீதம் அதிகரித்து ரூ.20,860 கோடியை எட்டியது.

கடந்த மாா்ச் 31 உடன் நிறைவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் ரூ.12,232.9 கோடி நிகர லாபத்தை ஈட்டியது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.10,866.2 கோடியுடன் ஒப்பிடுகையில் 12.57 சதவீதம் அதிகம். மேலும், கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் முழுமையான செயல்பாட்டின் மூலம் ரூ.79,747.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இது, 2020-21 நிதியாண்டு வருவாயான ரூ.62,234.4 கோடியுடன் ஒப்பிடும்போது 28 சதவீதம் அதிகமாகும் என விப்ரோ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான தைரி டெலாபோா்டே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் விப்ரோ பங்கின் விலை 2.59 சதவீதம் சரிந்து ரூ.509.00-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT