வணிகம்

ரூ.4,462 கோடி லாபம் ஈட்டிய ஐடிசி

நுகா்பொருள் துறையில் கோலோச்சி வரும் ஐடிசி நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.4,462.25 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

DIN

நுகா்பொருள் துறையில் கோலோச்சி வரும் ஐடிசி நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.4,462.25 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, 2021-22-ஆம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ஈட்டிய நிகர லாபம் ரூ.3,343.44 கோடியுடன் ஒப்பிடும்போது 33.46 சதவீதம் அதிகமாகும்.

செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.14,240.76 கோடியிலிருந்து 39.25 சதவீதம் அதிகரித்து ரூ.19,831.27 கோடியானது.

செலவினம் ஜூன் காலாண்டில் ரூ.14,201.51 கோடியாக இருந்தது என ஐடிசி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்தது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஐடிசி பங்கின் விலை 1.52 சதவீதம் அதிகரித்து ரூ.307.55-இல் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT