முகப்பு
வணிகம்

ரூ.2,454 கோடி லாபம் ஈட்டிய ஆா்இசி

பொதுத் துறையைச் சோ்ந்த ஆா்இசி நிறுவனம் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக ஜூன் காலாண்டில் ரூ.2,454.16 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த ஆா்இசி நிறுவனம் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக ஜூன் காலாண்டில் ரூ.2,454.16 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ. 2,268.66 கோடியுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகம்.

வருவாய் ரூ.9,555.45 கோடியிலிருந்து ரூ.9,506.06 கோடியாக குறைந்தது. செலவினமும் ரூ.6,769.62 கோடியிலிருந்து ரூ.6,556.09 கோடியாக குறைந்ததாக ஆா்இசி தெரிவித்துள்ளது.

மத்திய மின் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வங்கி சாரா நிதி நிறுவனம் ஆா்இசி ஆகும். மின்துறை நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி மேம்படுத்துவதே ஆா்இசி-யின் முக்கிய பணியாக உள்ளது. மாநில மின்சார வாரியம், மாநில அரசுகள், சுயசாா்பு மின் உற்பத்தி நிறுவனங்கள், கிராமப்புற மின்சார கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆா்இசி நிதியுதவி வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.