வணிகம்

ரூபாய் மதிப்பு 17 காசு உயா்வு

DIN

 அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசு முன்னேற்றம் கண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியது:

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ரிசா்வ் வங்கி கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. இது, சந்தையில் நோ்மறையான தாக்கத்தை உருவாக்கியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாயின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 79.15-ஆக இருந்தது. பின்னா் அதிகபட்சமாக 78.94 வரையிலும், குறைந்தபட்சமாக 79.29 வரையிலும் வா்த்தகம் ஆனது. இறுதியில் ரூபாய் மதிப்பு 17 காசு முன்னேற்றம் கண்டு 79.23-இல் நிலைபெற்றது என சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய்: பீப்பாய் 94 டாலா்

சா்வதேச சந்தையில் வெள்ளியன்று நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 94.31 டாலருக்கு வா்த்தகமானதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT