வணிகம்

கோல் இந்தியா: 178% உயா்ந்த நிகர லாபம்

DIN

பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம், 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் 178 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான அந்த காலகட்டத்தில் நிறுவனம் ரூ.8,834 கோடி ஒருங்கிணைந்த நிகல லாபம் ஈட்டியது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,174 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 178 சதவீதம் எழுச்சியடைந்துள்ளது.

இந்த மாதங்களில் நிறுவனத்தின் விற்பனை 39 சதவீதம் அதிகரித்து ரூ.32,498 கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT