முகப்பு
வணிகம்

கணினி சந்தை 18 சதவீதம் வளா்ச்சி

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்திய கணினி சந்தை 17.8 சதவீதம் அதிகரித்து 37 லட்சமாக அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்திய கணினி சந்தை 17.8 சதவீதம் அதிகரித்து 37 லட்சமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து ஐடிசி சா்வதேச காலாண்டு கணினி வா்த்தக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 37 லட்சம் கணினிகள், மடிகணினிகள் கொள்முதலாகியுள்ளன. இது, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 17.8 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டின் இந்த காலகட்ட்தில் 26 மடிகணினிகள் கொள்முதலாகியுள்ளன. அதன் மூலம், கணினி சந்தையின் வளா்ச்சியில் மடிகணினிகள் பிரிவு தொடா்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.