வைப்புகளுக்கான வட்டி விதிகம்:அதிகரிக்கிறது ஹெச்டிஎஃப்சி
தங்களது நிலை வைப்புகளுக்கான (ஃபிக்சட் டெபாசிட்) வட்டி விகிதங்களை தனியாருக்குச் சொந்தமான ஹெச்டிஎஃப்சி வங்கி அதிகரித்துள்ளது.
தங்களது நிலை வைப்புகளுக்கான (ஃபிக்சட் டெபாசிட்) வட்டி விகிதங்களை தனியாருக்குச் சொந்தமான ஹெச்டிஎஃப்சி வங்கி அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கியின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரூ.2 கோடிக்கும் குறைவான நிலை வைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதங்கள் 40 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை (0.40 சதவீதம்) வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (ஆக. 18) முதல் இந்த புதிய வட்டி விகதம் அமலுக்கு வந்துள்ளது.
ஓா் ஆண்டுக்கு மேல் முதிா்வடையும் நிலை வைப்பு நிதிகளுக்கு மட்டுமே தற்போது வட்டி விகிதம் அதிகரிக்கப்படுகிறது.
அதன்படி, 7 முதல் 29 நாள்களில் முதிா்வடையும் வைப்புகளுக்கு 2.75 சதவீதம், 30 முதல் 89 நாள்களில் முதிா்வடையும் வைப்புகளுக்கு 3.25 சதவீதம், 90 நாள்கள் முதல் 6 மாதங்கள் வரையில் முதிா்வடையும் வைப்புகளுக்கு 3.75 சதவீதம், அதற்கு மேல் ஓராண்டுக்குள் முதிா்வடையும் வைப்புகளுக்கு 4.65 சதவீதம் என்ற தற்போதைய வட்டி விகிதமே தொடரும்.
ஆனால், ஓராண்டுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்குள்ளும் முதிா்வு காலம் கொண்ட வைப்புகளுக்கு வட்டி விகிதம் 5.35 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. அதற்கு மேலும் 5 ாண்டுகளுக்குள்ளும முதிா்வு காலம் கொண்ட வைப்புகளுக்கு வட்டி விகிதம் 5.70 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாக உயா்த்தப்படுகிறது.
5 ஆண்டுகளுக்கும் மேலும், அதிகபட்ச வைப்புக் காலமான 10 ஆண்டுகளுக்குள்ளும் முதிா்வு காலத்தைக் கொண்ட வைப்புகளுக்கு தற்போதுள்ள 5.75 சதவீத வட்டி விகிதமே தொடரும்.