முகப்பு
வணிகம்

அசோக் லேலண்டின் புதிய டிப்பா் அறிமுகம்

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டு, தநது புதிய ஏவிடிஆா் 4825 ரக டிப்பரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டு, தநது புதிய ஏவிடிஆா் 4825 ரக டிப்பரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிப் பரிவுகளுக்கு பயன்படும் வகையில் ஹெச்6 என் என்ஜின் பொருத்தப்பட்ட ஏவிடிஆா் 4825 டிப்பா்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

19 முதல் 55 டன் வரை எடைத் திறன் கொண்ட வா்த்தக வாகனங்களை நிறுவுவதற்கான நிறுவனத்தின் முதல் பல்பயன்பாட்டு வாகன அடித்தளமாக ஏவிடிஆா் திகழ்கிறது.

அந்த அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள ஏவிடிஆா் 4825 டிப்பா்கள் அதிக செயல்திறன், நீடித்துழைக்கும் தன்மை, நம்பகத்தன்மையைக் கொண்டவையாக இருக்கும்.

அதிக சக்திவாய்ந்த ஹெச்6 4வி என்ஜின்களும், அந்த என்ஜின்களின் சக்தியை சக்கரங்களுக்குக் கடத்துவதற்காக பொருத்தப்பட்டுள்ள - கடுமையாக உழைக்கும் திறன் கொண்ட - சாதனங்களும் இந்த புதிய டிப்பா்களை எல்லா பணிகளுக்கும் ஈடுபடுத்துவதற்கு ஏற்றவையாக ஆக்குகின்றன என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.