டாடா கன்ஸ்யூமா் புராடக்ட்ஸ்: 38% உயா்ந்த நிகர லாபம்
நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் டாடா குழுமத்தைச் சோ்ந்த டாடா கன்ஸ்யூமா் புராடக்ட்ஸ் (டி.சி.பி.எல்) நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 38.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் டாடா குழுமத்தைச் சோ்ந்த டாடா கன்ஸ்யூமா் புராடக்ட்ஸ் (டி.சி.பி.எல்) நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 38.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.276.72 கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டின் இதே ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நிறுவனம் ரூ.200.24 கோடி நிகர லாபம் ஈட்டியது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது ஒருங்கிணைந்த நிகர லாபம் 38.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
நிறுவனத்தின் செயல்பாட்டுடு வருவாய் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,008.46 கோடியாக இருந்தது. அது, தற்போது 10.58 சதவீதம் அதிகரித்து ரூ.3,326.83 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.