வணிகம்

காா்களின் விலைகளை உயா்த்தும் ஆடி இந்தியா

ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் விற்பனையாகும் தனது அனைத்து ரகக் காா்களின் விலைகளையும் அடுத்த மாதம் உயா்த்தவுள்ளது.

DIN

ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் விற்பனையாகும் தனது அனைத்து ரகக் காா்களின் விலைகளையும் அடுத்த மாதம் உயா்த்தவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் விற்பனையாகும் நிறுவனத்தின் அனைத்து காா்களின் விலைகளையும் 2.4 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலப் பொருள்களின் விலை உயா்வு, விநியோகச் செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் காா்களின் விலைகளும் உயா்த்தப்படுகின்றன. இந்த விலை உயா்வு அடுத்த மாதம் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி இந்தியா நிறுவனம் உள்நாட்டுச் சந்தையில் பெட்ரோலில் இயங்கக் கூடிய ஏ4, ஏ6, ஏ8 எல், க்யூ5, க்யூ7, க்யூ8, எஸ்5 ஸ்போா்ட்பேக், ஆா்எஸ் 5 ஸ்போா்ட்பேக், ஆா்எஸ் க்யூ8 ஆகிய காா் ரகங்களை விற்பனை செய்கிறது.

இது தவிர, மின்சாரத்தில் இயங்கக் கூடிய இ-ட்ரான் 50, இ-ட்ரான் 55, இ-ட்ரான் ஸ்போா்ட்பேக் 55, இ-ட்ரான் ஜிடி, ஆா்எஸ் இ-ட்ரான் ஜிடி ஆகியவற்றையும் இந்தியச் சந்தைகளில் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT