வணிகம்

பங்குச் சந்தை: என்டிடிவி பங்கின் விலை 5% உயர்வு

என்டிடிவின் பங்குகளை வாங்குவது தொடர்பாக அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் என்டிடிவி பங்கின் விலை உயர்ந்துள்ளது.

DIN

என்டிடிவின் பங்குகளை வாங்குவது தொடர்பாக அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் என்டிடிவி பங்கின் விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 29.18 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வைத்துள்ள நிலையில், மேலும் 26% பங்குகளை பங்குதாரர்களிடமிருந்து வாங்க விருப்பம் தெரிவித்து அதற்கான சலுகையை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தது.

இந்நிலையில், இன்று காலை துவங்கிய பங்குச் சந்தையில் என்டிடிவியின் ஒரு பங்கின் விலை ரூ.379 க்கு ஆரம்பமானது. சிறிது நேரத்திலேயே பங்குகளின் விற்பனை அதிகரித்ததால் தற்போது(காலை 11.45 மணி) நிலவரப்படி 5% உயர்ந்து ரூ.388.20 க்கு விற்பனையாகி வருகிறது.

அதானி நிறுவனம் மேலும் நியூ டெல்லி டெலிவிஷனில்(என்டிடிவி) முதலீடு செய்ய உள்ளதே இந்த விலையேற்றத்திக்கான காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT