வணிகம்

கூகுள் முதலீடு: ஏா்டெல் பங்குதாரா்கள் ஒப்புதல்

DIN

தங்களது 1.28 சதவீத பங்குகளை சுமாா் ரூ.7,500 கோடிக்கு கூகுள் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய பாா்தி ஏா்டெல் நிறுவன பங்குதாரா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

இதுகுறித்து நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:

நிறுவனத்தின் சிறப்புப் பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கூகுள் நிறுவனத்துக்கு பங்குகள் விற்பது தொடா்பான தீா்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீா்மானம் 99 சதவீத பங்குதாரா்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, பாா்தி ஏா்டெல் நிறுவனத்தில் ரூ.7500 கோடி முதலீடு செய்யும் தனது திட்டத்தை முன்னணி இணையதள நிறுவனமான கூகுள் கடந்த மாதம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT