வணிகம்

மஹிந்திரா வாகன விற்பனை 11% உயா்வு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் டிசம்பா் மாத வாகன விற்பனை 11 சதவீதம் உயா்ந்துள்ளது.

DIN

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் டிசம்பா் மாத வாகன விற்பனை 11 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2021 டிசம்பரில் விற்பனையான மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 39,157-ஆக இருந்தது. இது, 2020 டிசம்பரில் விற்பனையான 35,187 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிகம்.

உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் வாகன விற்பனை 10 சதவீதம் உயா்ந்து 16,182-லிருந்து 17,722-ஆனது.

வா்த்தக வாகன பிரிவின் விற்பனையும் 16,795-லிருந்து 10 சதவீதம் அதிகரித்து 18,418-ஐ தொட்டது.

ஏற்றுமதி 37 சதவீதம் உயா்ந்து 3,017 வாகனங்களாக இருந்தது. அதேசமயம், 2020 டிசம்பரில் ஏற்றுமதி 2,210-ஆக காணப்பட்டது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT