வணிகம்

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ.67,300 கோடி

இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் செப்டம்பா் காலாண்டில் ரூ.67,300 கோடியாக இருந்தது என டிராய் தெரிவித்துள்ளது.

DIN

இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் செப்டம்பா் காலாண்டில் ரூ.67,300 கோடியாக இருந்தது என டிராய் தெரிவித்துள்ளது.

இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஒழுங்காற்று அமைப்பு (டிராய்) இதுகுறித்து மேலும் கூறியது:

கடந்த 2021-ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.67,300 கோடியை வருவாயாக ஈட்டின. இது, இந்நிறுவனங்கள் கடந்த 2020 ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.68,228 கோடியுடன் ஒப்பிடுகையில் 1.36 சதவீதம் குறைவாகும்.

கடந்த 2020-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆா்) ரூ.45,707 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டில் 17.07 சதவீதம் உயா்ந்து ரூ.53,510 கோடியை எட்டியது. இதில், ரிலையன்ஸ் ஜியோவின் ஏஜிஆா் தொகை அதிகபட்ச அளவாக ரூ.18,467.47 கோடியாக இருந்தது என டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT