வணிகம்

’விவோ டி1 5ஜி' ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’விவோ டி1 5ஜி’ ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

DIN

விவோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’விவோ டி1 5ஜி’ ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

ஸ்மார்ட்போன் உற்பத்தித் துறையில் அதிகப்படியான விற்பனையை சாத்தியப்படுத்தி வரும் விவோ நிறுவனம் தன்னுடைய அடுத்தடுத்த தயாரிப்புகளை வேகமாக சந்தைப்படுத்தி வருகிறது.

முன்னதாக ’விவோ ஒய் 33 டி' இந்தியாவில் அறிமுகமான நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனும் அறிமுகமாக உள்ளது.

மேலும், விவோ நிறுவனத்தின் ’டி’ வரிசையின் முதல் ஸ்மார்ட்போனாக ’டி1 5ஜி’ வெளியாகயிருக்கிறது.

’விவோ டி1 5ஜி’ சிறப்பம்சங்கள் :

*6.67 அமொல்ட் 1080 பைட்ஸ் ஃபுல் எச்டி திரை

*குவால்கம் ஸ்னாப் டிராகன் 778

* உள்ளக நினைவகம் 8 ஜிபி  + கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

*ஆன்டுராய்ட் 11

* 64 எம்பி முதன்மை கேமராவுடன் 8 எம்பி கூடுதல் லென்ஸ் , 16 எம்பி செல்ஃபி கேமரா

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

இந்தியாவில்  8ஜிபி+128ஜிபி, 8ஜிபி+256 ஜிபி , 12ஜிபி+256 ஜிபி என மூன்று வகையான நினைவக வசதிகளுடன் வெளியாகும் ’டி1 5ஜி’ ஸ்மார்ட்போனின் விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT