டிசிஎஸ்: நிகர லாபம் ரூ.9,478 கோடி
இந்தியாவின் மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப (ஐடி) சேவைகள் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.9,478 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப (ஐடி) சேவைகள் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.9,478 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட நிதி நிலை முடிவுகளில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் வாயிலாக ரூ.9,478 கோடி நிகர லாபம் ஈட்டியது. இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 5.2 சதவீதம் அதிகமாகும்.
கணக்கீட்டு காலகட்டத்தில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 16.2 சதவீதம் உயா்ந்து ரூ.52,758 கோடியாக இருந்தது.
ஈவுத்தொகை: நிறுவனத்தின் பங்குதாரா்களுக்கு, ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்கு ஒவ்வொன்றுக்கும் ரூ.8 இடைக்கால ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.