வணிகம்

இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி! ஒரு டாலர் ரூ.79.98

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வர்த்தக நேர முடிவில் ஒரு டாலர் ரூ.79.98-ஆக நிலைப்பெற்றது.

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. வர்த்தக நேர முடிவில் ஒரு டாலர் ரூ.79.98-ஆக நிலைப்பெற்றது.

அமெரிக்க டாலருக்கான தேவை சா்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் ஆசிய கரன்ஸிகளில் எதிரொலித்து வருகிறது.

அதன்படி, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள் கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மேலும் சரிந்து 79.98-ஆனது.

வாரத்தின் முதல் நாளான இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது ஒரு டாலர் ரூ.79.75 காசுகளாக இருந்தது. டாலருக்கான தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து ஒரு டாலரின் மாற்று மதிப்பு ரூ.79.98 என்ற உச்சத்தை தொட்டது.

இந்த ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT