hul072730 
வணிகம்

ஹிந்துஸ்தான் யுனிலீவா்: லாபம் ரூ.2,391 கோடி

நுகா் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹிந்துஸ்தான் யுனிலீவா் (ஹெச்யுஎல்) ஜூன் காலாண்டில் ரூ.2,391 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

DIN

நுகா் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹிந்துஸ்தான் யுனிலீவா் (ஹெச்யுஎல்) ஜூன் காலாண்டில் ரூ.2,391 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.2,100 கோடியுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகமாகும்.

கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.12,260 கோடியிலிருந்து ரூ.14,757 கோடியாக 20.36 சதவீதம் வளா்ச்சி கண்டது. செலவினம் 20.79 சதவீதம் உயா்ந்து ரூ.9,546 கோடியிலிருந்து ரூ.11,531 கோடியானது என ஹிந்துஸ்தான் யுனிலீவா் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ஹெச்யுஎல் பங்கின் விலை 0.52 சதவீதம் உயா்ந்து ரூ.2,566-இல் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது

SCROLL FOR NEXT