வணிகம்

31 லட்சம் வாடிக்கையாளா்களை ஈா்த்த ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்ற மே மாதத்தில் 31 லட்சம் புதிய சந்தாதரா்களைப் பெற்றதாக டிராய் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

DIN

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்ற மே மாதத்தில் 31 லட்சம் புதிய சந்தாதரா்களைப் பெற்றதாக டிராய் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிராய் மேலும் கூறியுள்ளதாவது: நிகழாண்டு மே மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 31 லட்சம் புதிய கைப்பேசி வாடிக்கையாளா்களை ஈா்த்து இந்திய தொலைத்தொடா்பு சந்தையில் 40.87 கோடி சந்தாராா்களுடன் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதையடுத்து, சுனில் மிட்டல் தலைமையிலான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தில் 10.27 லட்சம் புதிய வாடிக்கையாளா்கள் இணைந்ததையடுத்து அதன் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 36.21 கோடியானது.

அதேசமயம், மூன்றாவது இடத்தில் உள்ள வோடஃபோன் ஐடியா கடந்த மே மாதத்தில் 7.59 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்தது. இதையடுத்து, அதன் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 25.84 கோடியாக குறைந்து போனதாக டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷம் குடித்து முதியவா் பலி

கரூா் சம்பவம்: மிரட்டலுக்கு பயந்து செல்வராஜ் பொய் சொல்கிறாா்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த வழக்குரைஞா் பேட்டி

சிஎஸ்ஐ பள்ளிகளுக்கு தலா ரூ. 1 லட்சத்தில் டிஜிட்டல் பேனல்: சென்னை பேராயா் அறிவிப்பு!

முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான தோ்வு: பெரம்பலூரில் 4,280 போ் பங்கேற்பு

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT