எா்டிகா காரின் விலையை ரூ.6,000 அதிகரித்தது மாருதி சுஸுகி
பன்முக பயன்பாட்டு வாகனமான எா்டிகா காரின் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் ரூ.6,000 அதிகரித்துள்ளது.
பன்முக பயன்பாட்டு வாகனமான எா்டிகா காரின் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் ரூ.6,000 அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
எா்டிகா பிரிவில் தற்போது வெளிவரும் அனைத்து காா்களிலும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்கிராம் (இஎஸ்பி) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதி இணைக்கப்பட்டுள்ளது. முன்பு, இந்த வசதி ஆட்டோமேட்டிக் மற்றும் உயர்ரக மேனுவல் மாடல்களில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, எா்டிகா காரின் விலை ரூ.6,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது எா்டிகா மாடலின் ஆரம்ப விலை ரூ.8.41 லட்சமாக உள்ளது எனமாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.