முகப்பு
வணிகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்:லாபம் ரூ.47 கோடி

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.47.26 கோடி நிகர லாபத்தினை பதிவு செய்துள்ளது

Updated On : 22 ஜூலை, 2025 at 9:56 AM
பகிர்:

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.47.26 கோடி நிகர லாபத்தினை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.40.03 கோடியுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் அதிகம்.

2021 ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் வழங்கிய கடன் ரூ.249 கோடியாக இருந்த நிலையில், நடப்பு 2022 ஜூன் 30 உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.796 கோடியாக அதிகரித்துள்ளது.

வரும் இரண்டாவது காலாண்டில் நிறுவனம் வழங்கும் கடன் ரூ.800 கோடி என்ற இலக்கை எட்டும். கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வழங்கப்பட்ட கடன் ரூ.794 கோடியாக இருந்தது என சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →