ரூ.1,036 கோடி நிகர லாபத்தை பதிவு செய்த மாருதி சுஸுகி
மாருதி சுஸுகி இந்தியா (எம்எஸ்ஐ) ஜூன் காலாண்டில் ரூ.1,036 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
மாருதி சுஸுகி இந்தியா (எம்எஸ்ஐ) ஜூன் காலாண்டில் ரூ.1,036 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
கரோனா தாக்கத்தின் எதிரொலியாக கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மாருதி சுஸுகி ஈட்டிய நிகர லாபம் ரூ.475 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த நிலையில், நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.1,036 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், நிகர விற்பனை ரூ.17,776 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.26,512 கோடியை எட்டியது. வாகனங்களின் விற்பனை 3,53,614-லிருந்து 4,67,931-ஆனது.
ஏப்ரல்-ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்நாட்டில் வாகன விற்பனை 3,98,494-ஆகவும், ஏற்றுமதி 69,437-ஆகவும் இருந்தது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.