வணிகம்

எம்2 சிப் பொருத்திய ஆப்பிள் மேக்புக் ஏர் அறிமுகம், விலை எவ்வளவு?

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் எம்2 சிப் கொண்ட தன் புதிய மேக்புக் ஏர்  மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் எம்2 சிப் கொண்ட தன் புதிய மேக்புக் ஏர்  மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை வெளியான மேக்புக்களில் எம்1 சிப்களே அதிகம் பயபடுத்தப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக எம்2 சிப் கொண்ட புதிய மேக்புக் 2022 மற்றும் 13 இன்ச் திரை மேக்புக் ஏர் சாதனத்தையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த மடிக்கணினிகளே முதல் எம்2 சிப் பொருத்தப்பட்ட சாதனங்கள்.

குறைவான எடை, நான்கு வண்ணங்கள்( சில்வர், ஸ்பேஸ் கிரே, ஸ்டார்லைட் கோல்ட் மற்றும் மிட்நைட் ப்ளூ), யுஎஸ்பி(USB) போர்டல், டால்பி அட்மாஸ் மைக்ரோபோன் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் இந்த மேக்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் எம்2 புதிய மேக்புக் ஏர் 2022 ரூ.1,19,000 ஆகவும் எம்2 13 இன்ச் திரை மேக்புக் ஏர் ரூ.1,29,000 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம்  இவற்றின் விற்பனை துவங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவு!

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஆட்டோ பங்குகள் உயர்வு!!

தங்கம் விலை உயர்ந்தது: எவ்வளவு?

பிகார் பேரவைத் தேர்தல்: காலை 9 மணி வரை 13.13% வாக்குப்பதிவு!

அமெரிக்கா தனது இறையாண்மையை இழந்துவிட்டது! டிரம்ப் பேச்சு

SCROLL FOR NEXT