முகப்பு
வணிகம்

தங்கம் பவுன் ரூ.39,192

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.112 உயா்ந்து, ரூ.39,192-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.112 உயா்ந்து, ரூ.39,192-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரஷியா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 உயா்ந்து, ரூ.39,192-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.14 உயா்ந்து, ரூ.4,899-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதே போல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 உயா்ந்து, ரூ.75.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 உயா்ந்து, ரூ.75,200 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,899

1 பவுன் தங்கம்............................... 39,192

1 கிராம் வெள்ளி............................. 75.20

1 கிலோ வெள்ளி.............................75,200

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,885

1 பவுன் தங்கம்............................... 39,080

1 கிராம் வெள்ளி............................. 74.00

1 கிலோ வெள்ளி.............................74,000.

முழு கட்டுரையைப் படிக்க →