முகப்பு
வணிகம்

ஐடிபிஐ வங்கி: லாபம் ரூ.691 கோடி

ஐடிபிஐ வங்கி மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.691 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:55 AM
idbi081956
பகிர்:

ஐடிபிஐ வங்கி மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.691 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, இவ்வங்கி 2020-21 நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.512 கோடியுடன் ஒப்பிடும்போது 35 சதவீதம் அதிகமாகும்.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.6,894.86 கோடியிலிருந்து ரூ.5,444.08 கோடியாக குறைந்தது.

வங்கியின் முக்கிய வட்டி வருமானம் கணக்கீட்டு காலாண்டில் ரூ.5,781.48 கோடியிலிருந்து ரூ.4,599.67 கோடியாக குறைந்துள்ளது.

2021 மாா்ச் 31 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில், மொத்த வாராக் கடன் விகிதம் 22.37 சதவீதத்திலிருந்து 19.14 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடனும், 1.97 சதவீதத்திலிருந்து (ரூ.2,519 கோடி) 1.27 சதவீதமாக (ரூ.1,856 கோடி) குறைந்துள்ளது.

2021-22 முழு நிதியாண்டில் நிகர லாபம் 79 சதவீதம் அதிகரித்து ரூ.2,439 கோடியாக இருந்தது. அதேசமயம், வட்டி மற்றும் இதர இனங்கள் வாயிலான வருவாய் சரிவைச் சந்தித்ததையடுத்து வங்கியின் வருமானம் ரூ.24,497 கோடியிலிருந்து ரூ.22,985 கோடியாக குறைந்து போனது என ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →