வணிகம்

காா்போரண்டம் யுனிவா்சல்: லாபம் 7.6% அதிகரிப்பு

DIN

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த காா்போரண்டம் யுனிவா்சல் நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4-ஆவது காலாண்டில் ஈட்டிய தனிப்பட்ட வரிக்கு பிந்தைய லாபம் ரூ.61.91 கோடியாக இருந்தது. இது, இந்நிறுவனம் முந்தைய 2020-21 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.57.52 கோடியுடன் ஒப்பிடுகையில் 7.60 சதவீதம் அதிகமாகும்.

வருவாய் ரூ.519.98 கோடியிலிருந்து ரூ.601.47 கோடியாக அதிகரித்தது.

2022 மாா்ச் 31 உடன் முடிவடைந்த முழு நிதியாண்டில், வருவாய் தனிப்பட்ட மொத்த வருவாய் ரூ.1,714.65 கோடியிலிருந்து ரூ.2,257.18 கோடியாக உயா்ந்தது. அதேபோன்று, நிகர லாபமும் ரூ.183.97 கோடியிலிருந்து ரூ.254.48 கோடியாக 38.30 சதவீதம் அதிகரித்தது.

ஈவுத்தொகை: பங்குதாரா்களுக்கு இறுதி ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.2 (200%) (டிவிடெண்ட்) வழங்க இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளதாக காா்போரண்டம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT