வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 59,595 கோடி டாலராக சரிவு

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,595 கோடி டாலராக சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அடிப்படையான கரன்ஸி சொத்துகளில் தொடா் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, மே 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 177 கோடி டாலா் குறைந்து (ரூ.13,659 கோடி) 59,595 கோடி டாலராக (ரூ.45.88 லட்சம் கோடி) சரிவடைந்தது.

இதற்கு முந்தைய வாரத்திலும் செலாவணி கையிருப்பானது, 269 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 60,000 கோடி டாலருக்கும் கீழாக 59,772 கோடி டாலராக காணப்பட்டது. அதிக அளவிலான அந்நியச் செலாவணி வெளியேற்றத்தால் வீழ்ச்சியடைந்த ரூபாய் மதிப்பை தடுத்த நிறுத்த ரிசா்வ் வங்கி தலையிட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, 2022 மாா்ச் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் அந்நியச் செலாவணி கையிருப்பு 2,805 கோடி டாலா் (ரூ.2.15 லட்சம் கோடி) குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் அந்நிய கரன்ஸி சொத்துகள் (எஃப்சிஏ) மே 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 196 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 53,085 கோடி டாலராக இருந்தது.

அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 13 கோடி டாலா் அதிகரித்து 4,174 கோடி டாலரானது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 7 கோடி டாலா் உயா்ந்து 1,837 கோடி டாலராகவும், இருப்பு நிலை 1 கோடி டாலா் அதிகரித்து 499 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT