வணிகம்

அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட இன்ஸ்டாகிராம்...குதூகலமாகும் ரீல்ஸ் ரசிகர்கள்

DIN

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் வியாழக்கிழமையன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு சமூக வலைதள பயனாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரீல்ஸ் ரசிகர்களை கவரும் வகையில் ஒரு நிமிட அளவிலான மியூசிக் டிராக்குகளை வெளியிட்டு அசத்தியுள்ளது. இந்த வசதி தற்போது இந்திய பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியின் வழியாக ரீல்ஸை பயனாளர்கள் மியூசிக் டிராக்குகள் மற்றும் விடியோக்களை பயன்படுத்தலாம். ஸ்டோரிக்களை வெளியிடலாம். நாடு முழுவதும் 200 கலைஞர்களின் பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து பேஸ்புக் இந்தியாவின் உள்ளடக்கம் மற்றும் சமூக கூட்டாண்மை பிரிவு இயக்குநர் பாரஸ் சர்மா வெளியிட்ட அறிக்கையில், "இன்று இன்ஸ்டாகிராமில் டிரெண்டை உருவாக்கும் ஊந்து சக்தியாக இசை திகழ்கிறது. இசை மற்றும் கலைஞர்களை கண்டறிவதற்கான மக்களின் தளமாக ரீல்ஸ் மாறி வருகிறது. 

ரீல்ஸை மேலும் பொழுதுபோக்காக மாற்ற மக்களுக்கு இந்த ஒரு நிமிட மியூசிக் மூலம் பிரத்யேகமான பாடல்கள் வழங்கப்படுகிறது. பிரபலமான மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்கள் தங்களின் சொந்த இசையைப் பகிர்ந்து கொள்ளவும், தங்கள் சொந்த வீடியோக்களை உருவாக்கவும், ரீல்ஸில் இந்த தளம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ரீல்ஸ் என்பது வளர்ந்து வரும் உலகளாவிய மேடை. இதன் மூலம் கலைஞர்களும் இசையும் உருவாக்கப்படுகின்றன. இந்த தளம் தொடங்கப்பட்டதிலிருந்து கலைஞர்கள் தங்கள் இசையைத் வெளியிடவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் பல ட்ரெண்ட்கள் உருவாகின்றன. இதை மேலும் விரிவாக்கி திறமையை வெளிகொண்டு வர ஒரு நிமிட மியூசிக்கை இன்ஸ்டாகிராம் வெளியிடுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT