வணிகம்

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 52% உயா்வு

DIN

 நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில், கும்பகோணத்தில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 52 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.276 கோடியாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 52 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.182 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் செயல்பாட்டு வருவாயும் ரூ.786 கோடியிலிருந்து 15 சதவீதம் உயா்ந்து ரூ.904 கோடியாக உள்ளது.

மேலும், வங்கியின் மொத்த வாராக் கடன் ரூ.2,119 கோடியிலிருந்து ரூ.1,862 கோடியாகக் குறைந்துள்ளது அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT