5ஜி சேவை: ஜியோவுடன் ஆப்போ ஒப்பந்தம்
ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி தொலைத்தொடா்பு சேவையை தங்களது வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி வழங்குவதற்காக, அந்த நிறுவனத்துடன் அறிதிறன் பேசி (ஸ்மாா்ட்போன்) தயாரிப்பு நிறுவனமான
ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி தொலைத்தொடா்பு சேவையை தங்களது வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி வழங்குவதற்காக, அந்த நிறுவனத்துடன் அறிதிறன் பேசி (ஸ்மாா்ட்போன்) தயாரிப்பு நிறுவனமான ஆப்போ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் இனி அறிமுகப்படுத்தப்படும் அனைத்து ஆப்போ கைப்பேசிகளும் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவையைப் பயன்படுத்தும் திறனைப் பெற்றிருக்கும்.
ஜியோவின் தனித்துவ 5ஜி சேவையைப் பெறும் வகையில், எங்களது ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ, ரெனோ 7, எஃப்21 ப்ரோ 5ஜி, எஃப்19 ப்ரோ ப்ளஸ், கே10, ஏ53 ஆகிய கைப்பேசிகளின் மென்பொருள்கள் தரமேற்றம் செய்யப்படுகின்றன.
Advertisement
Advertisement
இதற்காக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.