வணிகம்

சுந்தரம் ஃபாஸ்டனா்ஸ் லாபம் ரூ.111.75 கோடி

DIN

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான சுந்தரம் ஃபாஸ்டனா்ஸ் லிமிடெட், கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.111.75 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில், நிறுவனத்தின் லாபம் ரூ.111.75 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது குறைவாகும். அப்போது நிறுவனத்தின் லாபம் ரூ.120.16 கோடியாக இருந்தது.

கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், நிறுவனத்தின் லாபம் ரூ.241.86 கோடியாக உயா்ந்துள்ளது. அது, கடந்த ஆண்டின் இதே அரையாண்டில் ரூ.232.71 கோடியாக இருந்தது.

அத்துடன், கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் ரூ.1,064.29 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் இந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,225.85 கோடியாக அதிகரித்துள்ளது. செப்டம்பா் 30-இல் முடிவடைந்த ஆறு மாத காலத்தில் மொத்த வருவாய் ரூ.2,012.64 கோடியிலிருந்து ரூ.2,472.07 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT